25.1.11

நாடக மேடை
என்
இனியவளை பார்த்த பின்பு..!

நட்சத்திர கூட்டங்களும்
நடித்து நாடகமாடியது
இறைவன் படைத்த
இயற்கைகள் யாவும் அழகென்று
இறைவனுக்காக...!!

டாஸ்மாக் - வாங்கும் காமதேனு..


அரசுக்கு கூடுகிறது வரி
டாஸ்மார்க்கில்
குடிமகன்களால்..!!

குடிமகன்களின்
குடில்களில் கூடுகிறது
வறுமை என்னும் வரி..!!

வறுமை
வலியாக மாறி
வலி
இழப்பாக மாறும்  

சாபம்
யார் விட்டது தமிழகத்திற்கு?
குடிமகன்களே சிந்தியுங்கள்.!

தமிழகம்
உன்கையில் என்பதைவிட
உன் குடும்பம் உன் கையில்.!

சிந்தித்தால் உயரும்
வீடும்..! நாடும்..!!

22.1.11

குளியல் (குழந்தை) கூத்து..!!

கூதுகலமாய்
குளியல் கூத்தடிக்கும்
குழந்தாய்..!!

உன் குணம்
உன் சிரிப்பில் தெரிகிறது..!!

உன் மனம்
உன் மகிழ்ச்சியில் தெரிகிறது..!!

கங்கை நதியும்
உன் காலில் விழும்
உன் உன்னதமான மேனியில்
உலாவிய அந்த
உன்னத நீருக்காக...!!!

வீர (சூதாட்ட) விளையாட்டுகள்..!!

வீரர்கள்
வியாபாரம் ஆனார்கள்
தேர்வு
என்ற பெயரால்..!!

விளையாட்டோ
விற்பனை ஆனது
சூதாட்டம் 
என்ற பெயரால்..!!

விளையாட்டின்
வெற்றியும் தோல்வியும்
விடியுமுன்னே
புரோக்கர்களின் 
புரோக்கிராமில்...!!!

மரம் (மகிழ்ச்சியை) வளர்ப்போம்..!!

மழை வேண்டி
மனம் வருந்தி
மாற்றானிடம் (இறைவனிடம்)
மண்டியிடும் மானிடா..!!
மரம் வளர்த்து..!!
மண்ணை காத்து..!!
மழை வரவழைத்து..!!
மகிழ்ச்சியை உன் வசமாக்கு
மானிடா..!!

21.1.11

மறந்தது மனக்கவலை
மாலை நேரத்தில்
மஞ்சள் நிற வெயிலில்
மணற்பரப்பின் மீது
மயக்கும் அழகில் மங்கை
மங்கையின் மடியில் நான்
மனக்கவலையை  மறந்து.


அவளின் அழகு


அந்த பௌர்ணமி இரவில்
அமர்ந்து ரசித்தேன்
அவளின் அழகை…!!

அவளின் பின்னால் அந்த நிலவு
அந்த நிலவை பார்த்து சிரித்தேன் 
ஏளனமாய்…!!

அந்த நிலவோ அலறியது..!
அவளை விட சற்று குறைவுதான்
அழகில் நான்..!!

                                     

கவிதைக்கு வயது...!


வாலிக்கு வயதாகிறது
என்று
வருத்தப்படாதே..!
வாலி
எழுதிய வரிகளுக்கு
வயது திரும்பிகிறது..!
என்று
பெருமைப்படு  தமிழா...!

ஹைக்கூ...

இனிப்பும்
இன்பப்பட்டது
உன்
இதழ் பட்டு செல்லும்போது.