25.1.11

டாஸ்மாக் - வாங்கும் காமதேனு..


அரசுக்கு கூடுகிறது வரி
டாஸ்மார்க்கில்
குடிமகன்களால்..!!

குடிமகன்களின்
குடில்களில் கூடுகிறது
வறுமை என்னும் வரி..!!

வறுமை
வலியாக மாறி
வலி
இழப்பாக மாறும்  

சாபம்
யார் விட்டது தமிழகத்திற்கு?
குடிமகன்களே சிந்தியுங்கள்.!

தமிழகம்
உன்கையில் என்பதைவிட
உன் குடும்பம் உன் கையில்.!

சிந்தித்தால் உயரும்
வீடும்..! நாடும்..!!

4 comments:

 1. இன்று அரசு இயங்குவதே இவர்களை வைத்து தானே...!! நல்ல தலைப்பு தான் வைத்திருக்கீங்க!!

  ReplyDelete
 2. அருமை. தொடர்ந்து சிறப்பான கவிதைகள் தர வேண்டுகிறோம்..
  வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. சமூக சிந்தையுள்ள கவிதை.. உங்கள் விழிப்புணர்வுக்கு வாழ்த்தும், நன்றிகள்..

  ReplyDelete
 4. நன்றி ... தொடர்ந்து வாருங்கள் திரு.பாரத் அவர்களே

  ReplyDelete

உங்களின் மேலான கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..!